ஆறு இலங்கையர்களைக் கொன்ற நபர்; சட்டத்துறை நிபுணர்கள் கருத்து
கனடாவில் இலங்கையைச் சேர்ந்த 6 பேரைக் கொன்ற நபர் வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரது வழக்கு ஒரு அரிய வழக்கு என சட்டத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இலங்கையரான தனுஷ்க விக்கிரமசிங்க, அவரது மனைவியான தர்ஷனி ஏகநாயக (35), பிள்ளைகள் இனுக விக்ரமசிங்க (7), அஷ்வினி விக்கிரமசிங்க (4), ரனயா விக்ரமசிங்க (3) கெல்லி விக்கிரமசிங்க (2 மாதக்குழந்தை) ஆகியோர் Barrhaven என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வாழ்ந்துவந்தனர்.
கனடாவில் கல்வி கற்க வந்த இலங்கையரான ஃபெப்ரியோ டி ஸோய்சா (19) என்பவர் தனக்கு தங்க இடம் இல்லை என்று கூறியபோது, அவரை தன் வீட்டு அடித்தளத்தில் தங்கிக்கொள்ளச் சொல்லியிருக்கிறார் தனுஷ்க.
ஆனால், டி ஸோய்சா சரியாக படிக்காததால் தனது மாணவர் விசா ரத்தாகிவிடும், இலங்கையிலிருக்கும் தனது குடும்பமும் பணம் அனுப்பாது என பயந்துள்ளார்.
ஆகவே, முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு, தனுஷ்க குடும்பத்தையும், அவர்கள் வீட்டில் தங்கியிருந்த அமரகோன் என்பவரையும் கொடூரமாக கத்தியால் குத்திக் கொலை செய்தார் டி ஸோய்சா.
தன்னை நாடுகடத்திவிடுவார்கள் என்றும், தான் இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்றும், ஆகவேதான், தனுஷ்க குடும்பத்தையும், அமரகோனையும் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார் டி ஸோய்சா.
கொலை வழக்குகளைப் பொருத்தவரை, மேலைநாடுகளில், first-degree murder, second-degree murder என குற்றங்கள் வகைப்படுத்தப்படுகின்றன.
விடயம் என்னவென்றால், கொலைக் குற்றம் செய்தவர்கள் கூட, பொதுவாக தான் first-degree murder செய்ததாக ஒப்புக்கொள்வதில்லை.
ஆனால், டி ஸோய்சா, நான்கு எண்ணிக்கைகள் first degree murder, இரண்டு எண்ணிக்கைகள் second degree murder மற்றும் ஒரு எண்ணிக்கை attempted murder ஆகிய குற்றங்களை தான் செய்ததாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

விக்கிரமசிங்க குடும்பம் தனக்கு நல்லதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை என அவரே கூறியுள்ளதும் இவ்விடம் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில், இப்படி ஒருவர் first-degree murder செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளது அபூர்வம் என்கிறார்கள் சட்டத்துறை நிபுணர்கள்.
என்றாலும், இந்த வழக்கைப் பொருத்தவரை, அது நியாமானதும் கூட என்கிறார் Ottawa பல்கலை பேராசிரியரான ஜெனிஃபர் (Jennifer Quaid).
கனடாவைப் பொருத்தவரை, first-degree murder என்னும் நிலையிலான குற்றத்துக்கான தண்டனை, 25 ஆண்டுகள் ஜாமீனில் வர இயலாதவகையிலான ஆயுள் தண்டனையாகும்.
டி ஸோய்சாவுக்கும் அந்த தண்டனைதான் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், யார் என்ன நியாயம் பேசினாலும், இரண்டு குடும்பங்களுக்கு அவர் ஏற்படுத்திய இழப்பை, யாராலும், எந்த காலத்திலும் ஈடு செய்யமுடியாது என்பதை மட்டும் மறுக்கமுடியாது!