மார்கம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஓருவர் பலி
கனடாவின் மார்கம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 61 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததுள்ளார்.
இந்த விபத்தில் 50 வயதுடைய மற்றொருவர் தீவிர காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக யார்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து ஒரு வோல்க்ஸ்வேகன் மற்றும் ஹோண்டா வாகனங்கள் மோதியதில் ஏற்பட்டதாகும்.
சம்பவம் மாலை 5.40 மணியளவில் ரீசர் சாலை மற்றும் 16வது அவென்யூ சந்திப்பில் நிகழ்ந்தது.
இந்த விபத்துக்கான மேலதிக விசாரணை யார்க் மாகாண முக்கிய விபத்து விசாரணைப் பிரிவு தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் உள்ளவர்கள் பொலிஸாருக்கு வழங்கமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.