இந்தியா புதுடெல்லி வெடிப்பு சம்பவம் ; குண்டுதாரி மருத்துவர் ? வெளிவரும் பகீர் தகவல்கள்
இந்தியாவின் - புதுடெல்லி - செங்கோட்டை சிற்றூந்து வெடிப்பு சம்பவம் தொடர்பில் காஷ்மீரை சேர்ந்த மூன்று மருத்துவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, பரிதாபாத்தில் உள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெருந்தொகையான பொருட்கள், வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் அமோனியம் நைட்ரேட் என இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குண்டு தாரியாகச் செயற்பட்ட மருத்துவர்
இந்தநிலையில், நேற்று (10) செங்கோட்டையின் அருகில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்திலும் அதே இரசாயனப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிற்றூந்து வெடிப்பு சம்பவத்தின் தற்கொலை குண்டுதாரியின் நிழற்படம் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது . வெடிப்புக்குள்ளாகிய குறித்த சிற்றூந்தை தற்கொலை குண்டு தாரியாகச் செயற்பட்ட மருத்துவர் ஒருவர் பயன்படுத்தியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பரிதாபாத்தில் மருத்துவர் ஒருவரின் வீடுகளிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டதை அடுத்தே, புதுடில்லியில் தங்கியிருந்த மருத்துவர் உயிருக்குப் பயந்து வெடிபொருட்களை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படுகிறது.
சம்பவம் தொடர்பாகக் கைதாகியுள்ள மருத்துவர்களில் ஒருவர், அண்மையில் தீவிரவாத அமைப்பை ஆதரிக்கும் வகையிலான சுவரொட்டிகளைப் பல பகுதிகளில் ஒட்டியதாகவும் விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.