சீனாவில் ஆணுறை, கருத்தடை மருந்துகளின் வரி விலக்கு ரத்து
சீனாவில் 'ஆணுறைக்கு வரி' கருத்தடை மருந்துகளுக்கு வரி விலக்கு ரத்தாகிறது சீனாவில் புதிய ஆணுறை வரி திட்டம் வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
இந்த புதிய மதிப்பு கூட்டப்பட்ட வரிச் சட்டத்தின்படி, ஜனவரி 1-ந்தேதி முதல் கருத்தடை மருந்துகள் மற்றும் ஆணுறை போன்ற கருத்தடை சாதன தயாரிப்பு களுக்கு வரி விலக்கு அளிக்கப்படாது என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

வரி விலக்கு அளிக்கப்படாது
ஆணுறை உள்ளிட்ட கருத்தடைச் சாதனங்கள் மீது சீனாவில் பெரும்பாலான பொருட்களுக்கு விதிக்கப்படும் 13 சதவீத மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்படும்.
இதற்கிடையே கருத்தடைச் சாதனங்களின் விலை உயர்வது என்பது மக்களை திட்டமிடப்படாத கர்ப்பம் மற்றும் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்கள் அதிகரிப்புக்கு கொண்டு செல்லும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த வரி விதிப்பு குறித்து சீன சமூக ஊடகங்களில் கடும் விவாதங்கள் கிளம்பி உள்ளன. விலை உயர்த்தப்பட்டாலும் ஆணுறை வாங்குவதை விடக் குழந்தை களை வளர்ப்பதற்கான செலவு அதிகமாகவே இருக் கும் என்று பலர் கிண்டல் செய்துள்ளனர்.
சீனாவில் பிறப்புகளை விட இறப்புகள் அதிகமானதால் 2023-ம் ஆண்டில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா சீனாவை முந்தியது.