கொரோனா முடிவதற்குள் சீனாவின் அடுத்த நடவடிக்கை; எச்சரிக்கும் நிபுணர்கள்
சீனாவில் உலகின் மிகப்பெரிய பன்றிப்பண்ணை அமைந்துள்ள நிலையில், இதன் காரணமாக நோய் பரவும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஹூபேயின் ஏசோ என்ற நகரில் 26 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட கட்டடம் அமைக்கப்பட்டு பன்றிப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே சமயத்தில் 6 லட்சத்து 50 ஆயிரம் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன.
முற்றிலும் நவீனமயமாக்கப்பட்ட வசதிகளுடன் உருவான இந்த பண்ணையில் இருந்து வரும் கழிவுகளை கொண்டு பயோகேஸ் உருவாக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அங்கு வளர்க்கப்படும் பன்றிகாளுக்கு தானியங்கி திட்டம் மூலம் உணவு வழங்க 30,000 உணவளிக்கும் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்த திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து ஆண்டிற்கு 12 லட்சம் பன்றிகளை வளர்த்து, பன்றி கறியை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் , ஒரே இடத்தில் இவ்வளவு பன்றிகளை வளர்த்து பண்ணை உருவாக்கிய திட்டம் ஒரு விபரீத முடிவு எனவும், சீனா எடுத்துள்ள முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கையுடன் பார்க்கின்றனர்.
ஏனெனில் ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தலுக்கு முன்பே பன்றி காய்ச்சல் பெரிதாக பரவி மக்களை கதிகலங்க வைத்தது.
இவ்வாறான நிலையில், ஒரு வேளை இங்கு இருக்கும் லட்சக்கணக்கான பன்றிகளில் ஏதேனும் ஒரு பன்றிக்கு பன்றிக்காய்ச்சல் வந்தாலும் அது பெரிதளவில் பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.