அச்சத்தில் உலக மக்கள்: சீனாவிலும் பரவத்தொடங்கியது உருமாறிய கொரோனா வைரஸ்!
பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது சீனாவிலும் பரவத்தொடங்கியுள்ளது. சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளுக்கும் பரவி பல அழிவுகளை உண்டாக்கியுள்ளது. கொரோனா தாக்கத்தால் உலகம் முழுவதும் இதுவரை 18 இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருமாறிய கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் முதல் முதலாக உறுதி செய்யப்பட்டது.
ஆரம்பத்தில் பரவிய கொரோனாவை விட தற்போது உருமாறியுள்ள கொரோனா 70 சதவீதம் வேகமாக பரவும் என தெரியவந்துள்ளது. இந்நிலையில், சீனாவிலும் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் சீனாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தற்போது உருமாறி மீண்டும் சீனாவையே வந்தடைந்துள்ளது.
பிரித்தானியாவிலிருந்து 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி சீனாவுக்கு சென்ற 23 வயதான இளம் பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் புதிய கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.