நள்ளிரவில் திடீரென மாயமான பெற்றோர்; கலங்கிய சிறுவன் எடுத்த முடிவு
சீனாவின் ஹூபெய் பகுதியிலுள்ள வூஹாய் நகரில் வாழும் சிறுவன் ஒருவன் நள்ளிரவில் பெற்றோர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்து காவல்துறையினரை அழைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
டொங்டொங் (Tongtong ) என்று அழைக்கப்படும் அந்த சிறுவன் தூக்கத்திலிருந்து பின்னிரவு சுமார் 2 மணிக்குக் கண் விழித்தபோது பெற்றோரைக் காணவில்லை என்பதை உணர்ந்தான்.

இதனால் பயந்துபோன அவன் உடனடியாகப் பெற்றோரை அழைத்தான். எனினும் யாரும் அழைப்பை எடுக்கவில்லை. இதனையடுத்து டொங்டொங் (Tongtong ) மீண்டும் மீண்டும் பெற்றோரை அழைத்தபோதும் பதிலே இல்லை.
அச்சம்கொண்ட சிறுவன் உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொண்டு தமக்குப் பயமாக உள்ளது என்றும் வீட்டிற்கு உடனடியாக வரும்படியும் அவன் கெஞ்சியுள்ளான்.
பெற்றோருக்கு ஒரு குறிப்பு
இதனையடுத்து சிறுவனின் வீட்டிற்குக் காவல்துறை அதிகாரி ஒருவர் சென்றபோது டொங்டொங் (Tongtong ) அழுததாக Changjiang Daily செய்தி நிறுவனம் கூறியுள்ளது. சிறுவனின் பெற்றோரை அங்கு சென்ற காவல்துறை அதிகாரியாலும் தொடர்புகொள்ளமுடியவில்லை.

இதனால் அவர் டொங்டொங் காவல்துறை நிலையத்துக்கு அழைத்துச்செல்ல முடிவெடுத்து சிறுவனை அழைத்துச் சென்றுள்ளார். அதேசமயம் அதிகாரியுடன் நிலையத்துக்குச் செல்வதற்குமுன் சிறுவன் பெற்றோருக்கு ஒரு குறிப்பையும் எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளான்.
அதன் பின்னர் டொங்டொங்கின் (Tongtong ) பெற்றோர் 3 மணி நேரங்கழித்து அதிகாரிகளைத் தொடர்புகொண்டனர். சிறுவனின் தயாருக்கு திடீரென்று மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டதால் டொங்டொங்கை வீட்டில் விட்டுச்சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன் பொலிஸ் நிலையம் சென்று சிறுவனை அழைத்துசென்றதாகவும் கூறப்படுகின்ற நிலையில், பெற்றோரைக் காணாமல் தவித்த சிறுவனின் செயல்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.