அமெரிக்க விசா விதிகளில் புதிய கட்டுப்பாடுகள் ; வெளிநாட்டு மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

United States of America Student Visa
By Sahana Jul 16, 2026 09:38 PM GMT
Report

அமெரிக்காவுக்குச் செல்லும் வெளிநாட்டு மாணவர்கள், பரிமாற்ற வருகையாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கான புதிய விசா விதிமுறைகளை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் (DHS) அறிவித்துள்ளது.

புதிய விதிமுறைகளின் கீழ், தற்போது நடைமுறையில் உள்ள "Duration of Status (D/S)" எனப்படும், கல்வி அல்லது பணிக்காலம் முழுவதும் தங்க அனுமதிக்கும் முறை மாற்றப்படவுள்ளது.

இதன்படி, சர்வதேச மாணவர்களுக்கான F விசா, பரிமாற்ற வருகையாளர்களுக்கான J விசா மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கான I விசா இனி கல்வித் திட்டம் அல்லது பணிக்காலம் முழுவதற்கும் செல்லுபடியாக இருக்காது.

அமெரிக்க விசா விதிகளில் புதிய கட்டுப்பாடுகள் ; வெளிநாட்டு மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | New Restrictions On Us Visa Rules

அதற்குப் பதிலாக, பெரும்பாலான வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பரிமாற்ற வருகையாளர்கள் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு பொதுவாக 240 நாட்கள் வரை மட்டுமே தங்க அனுமதி வழங்கப்படும். அதேவேளை, சீனப் பிரஜைகளான ஊடகவியலாளர் விசா (I Visa) வைத்திருப்போருக்கு இந்தக் காலம் 90 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட கால அவகாசத்திற்குப் பின்னரும் அமெரிக்காவில் தங்க விரும்புவோர், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களத்திடம் கால நீடிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் நுழைவதற்கான அனுமதியைப் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறை, அமெரிக்க காங்கிரஸின் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, Federal Register-இல் வெளியிடப்பட்டு 60 நாட்கள் நிறைவடைந்த பின்னர் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்குள் நுழையும் சர்வதேச மாணவர்கள், பரிமாற்ற வருகையாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வரும் நிலையில், குடியேற்றமற்ற (Non-immigrant) விசா வைத்திருப்பவர்கள் மீதான கண்காணிப்பை வலுப்படுத்துவதே இந்த மாற்றங்களின் முக்கிய நோக்கம் என அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க விசா விதிகளில் புதிய கட்டுப்பாடுகள் ; வெளிநாட்டு மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | New Restrictions On Us Visa Rules

2025 ஆம் ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்ற பின்னர், சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத குடியேற்றங்களை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த பரந்த குடியேற்றக் கொள்கையின் ஒரு பகுதியாகவே இந்த புதிய விசா விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US