அமெரிக்காவுக்கு எதிராக கூட்டு சேர்ந்த சீனா, வடகொரியா , ரஷ்யா!
சீனாவில் ரஷ்ய அதிபர் புடின் மற்றும் வட கொரியாவின் கிம் ஜாங்-உன் இருவரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் ஒரே மேடையில் தோன்றியது, உலக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
இது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு ஒரு நேரடி சவாலாகப் பார்க்கப்படுகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியோர் பெய்ஜிங்கில் நடைபெறும் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர்.
சீனாவின் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு
இது, அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளுக்கு ஒரு நேரடி சவாலாகப் பார்க்கப்படுகிறது இரண்டாம் உலகப் போரின் 80வது ஆண்டு நிறைவை ஒட்டி இந்த ராணுவ அணிவகுப்பு நடைபெறுகிறது.
இதில், சீனா தனது அதிநவீன ஆயுதங்களைக் காட்சிப்படுத்த உள்ளது. இது, அமெரிக்காவின் ராணுவ ஆதிக்கத்திற்குச் சவால் விடும் நோக்கமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த அணிவகுப்பில் எந்த மேற்குலக தலைவர்களும் கலந்துகொள்ளவில்லை. இந்த மூன்று நாடுகளின் ஒருங்கிணைப்பு, உலக பாதுகாப்பு நிலவரத்தை மாற்றியமைக்கும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
இந்த மூன்று தலைவர்களின் சந்திப்பு, மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை எதிர்த்து ஒரு புதிய உலக ஒழுங்கை உருவாக்குவதற்கான சீனாவின் முயற்சியை வெளிப்படுத்துகிறது.