ஜப்பானுக்கு உறுதியான பதிலடி கொடுப்போம் ; ஐநாவுக்கு சீனா பரபரப்புக் கடிதம்
அண்டை நாடான தைவானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியென கூறி போர் விமானங்களை பறக்கவிட்டும், போர் கப்பல்களை களம் இறக்கி சீனா அச்சுறுத்தி வருகிறது.
ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி, தைவானை சீண்டினால் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தார்.

ராணுவ நடவடிக்கை
இதனால் வெகுண்டெழுந்த சீனா, ஜப்பானின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் அந்த நாட்டிற்கு தங்களுடைய மக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் மேலும் அறிவுறுத்தியது.
இந்நிலையில், தைவான் விவகாரத்தில் ராணுவ தாக்குதல் நடத்த ஜப்பான் துணிந்தால், உறுதியான பதிலடி கொடுப்போம் என எச்சரிக்கை விடுத்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோவுக்கு சீனா கடிதம் எழுதியுள்ளது.
தைவானை கைப்பற்ற சீனா, ராணுவ நடவடிக்கை எடுத்தால் அதற்கு எதிராக எதிர்வினை ஆற்றுவோம் என ஜப்பான் பிரதமர் தகைச்சி கூறியிருந்த நிலையில், அந்த கருத்துக்கள் ராணுவ அச்சுறுத்தலுக்கு சமம் என கவலை தெரிவித்து ஐநாவிடம் சீனா முறையீடு செய்துள்ளது.