அமெரிக்க ஈரான் மோதல் நிறுத்தப்பட வேண்டும் - சீனா
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்தில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீனா அழைப்பு விடுத்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல்களை உடனடியாக நிறுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும் என ஐநா-வுக்கான சீனாவின் துணைத் தூதர் சன் லீ (Sun Lei) தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரானின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மதிக்க அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளன.

இது கண்டிப்பாக மதிக்கப்பட வேண்டும். மேலும், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில், "எது சரி, எது தவறு என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவது தற்போதைய சூழலில் மிக முக்கியம். ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்ற தனது வாக்குறுதியைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அதே நேரத்தில், சிவிலியன் பயன்பாட்டிற்காக அணுசக்தியை உற்பத்தி செய்துகொள்ளும் உரிமை ஈரானுக்கு உள்ளது" என்றும் குறிப்பிட்டார்.
பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் சீனாவின் நடுநிலையான மற்றும் நிலையான நிலைப்பாட்டை முன்வைத்த துணைத் தூதர், இந்த விவகாரத்தில் அமைதியான முறையில் தீர்வு காண சீனா தொடர்ந்து ஒரு ஆக்கப்பூர்வமான பங்கைக் வகிக்க உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.