அமெரிக்காவிற்கு பேரிடியாக அமைந்த சீனாவின் முடிவு!
அமெரிக்காவின் போயிங் விமானத்தை சீனா வாங்குவது இல்லை என நேற்ரு (15) அறிவித்துள்ளதோடு. அதன் விமான உதிரிப் பாகங்களை சீன கம்பெனிகள் வாங்கவும் சீன அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இதனால் அமெரிக்க தயாரிப்பான போயிங் விமான உற்பத்தி பெரும் நஷ்டமடைந்துள்ளது. இன்று மட்டும் 10% சத விகிதம் அதன் பங்குகள் சரிவடைந்துள்ள நிலையில் மேலும் 3% சத விகிதம் சரிவடையும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க வரலாற்றில் இது ஒரு பேரிடி
கடந்த காலங்களில், அமெரிக்கா போயிங் விமானம் 4 விமானத்தை தயாரித்தால், அதில் ஒரு விமானத்தை சீனா வாங்கி வந்தது. அந்த ரீதியில் ஆண்டு ஒன்றுக்கு பல பில்லியன் டாலர்களை சீனா செலவு செய்து அமெரிக்க போயிங் விமானங்களை வாங்கி வந்தது.
இந்நிலையில் தற்போது சீன அரசு விதித்துள்ள தடையால், சீன கம்பெனிகள் இனி போயிங் விமானத்தை வாங்க முடியாது. அமெரிக்க வரலாற்றில் இது ஒரு பேரிடியாக விழுந்துள்ளது.
இதனால் போயிங் நிறுவனம் முற்றாக ஸ்தம்பிக்கும் நிலை கூட தோன்றலாம் என வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சீனாவின் இந்த முடிவால் ஆடிப்போன அ வெள்ளை மாளிகை அதிகாரிகள் பீஜிங்(சீன) அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த பல தொலைபேசி அழைப்புகளை எடுத்தாகவும், எனினும் சீன அரசு எந்த ஒரு அழைப்பையும் ஏற்கவில்லை எவும் கூறப்படுகின்றது.
அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின்னர் அதிரடி மாற்றங்கள் என கூறி இறக்குமதி பொருட்களுக்கு கடும் வரிகளை விதித்தமை உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அமெரிக்கா மீது அதிரடி தடை
அது மட்டுமல்லாது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில், டிரம்ப்பின் நடவடிக்கைக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது.
அதன்படி, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 84 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக சீனா உயர்த்தியுள்ளது.
மேலும் டிரம்ப் இன் வரிகளால் , சினம் கொண்ட சீனா தற்போது அமெரிக்கா மீது அதிரடி தடைகளை வித்து வருகின்றது.