சீனா ஒரு கோடி தொழில் வாய்ப்புக்களை விரைவில் இழக்கும் ; எச்சரிக்கும் அமெரிக்கா
சீனா ஒரு கோடி (10 மில்லியன்) தொழில் வாய்ப்புக்களை விரைவில் இழக்கும் என்று அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்கொட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
சீனா அதன் வரிகளைக் குறைக்காவிட்டால் இந்நிலைக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றுள்ள அவர், அமெரிக்காவும் இதே நிலையில் சீனா மீதான வரியைப் பேணினாலும் நடக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பரஸ்பர வரி திட்டம்
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர வரி திட்டத்தை அறிவித்துள்ள சூழலில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக முறுகல் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் வௌ்ளை மாளிகையின் செய்தியாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அமெரிக்க திறைசேரி செயலாளர், அமெரிக்கா வரிகளை ஒரளவு குறைத்தாலும் கூட சீனா சுமார் 50 இலட்சம் தொழில்களை இழக்கும்.
நாங்கள் அவர்களுக்கு விற்பனை பொருட்களை விட கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகமான பொருட்களை அவர்கள் எமக்கு விற்பனை செய்கிறார்கள்.
அதனால் இந்த வரிகளை நீக்க வேண்டிய தேவை அவர்களுக்கு அதிகமுள்ளது. அத்தகைய அதிகரித்த வரிகள் நீடிப்பது அவர்களுக்கு நல்லதல்ல என குறிப்பிட்டுள்ளார்.