பிரான்சை வேவு பார்த்த சீனர்கள் கைது!
பிரான்சை வேவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்சின் தென் மேற்கு மாவட்டமான Gironde இல் இக்கைது சம்பவம் கடந்த ஜனவரி 31 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. சீனாவைச் சேர்ந்த இருவரும், இரு பிரெஞ்சு நபர்களும் என மொத்தம் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்சில் இருந்து சில 'உள்ளக' தகவல்களை சீனாவுக்கு விற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக இராணுவ ரகசியங்கள் உளவு பார்க்கப்பட்டதாகவும், செய்மதி மூலம் சில ரகசிய தகவல்களை எடுத்ததாகவும், புகைப்படங்களை எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டு, நேற்று வியாழக்கிழமை அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், சந்தேக நபர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.