சுற்று பயணத்திற்கு தயாராகும் சீன அதிபர்
சீன அதிபர் சி சின்பிங் (Xi Jinping) வரும் நவம்பர் மாதம் தென் கிழக்காசியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அப்போது அவர் இங்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்திக்கக் கூடும் என The Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.
COVID-19 இன் பிறகு சீன அதிபர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணமாக அது இருக்கும்.
இந்தோனேசியாவின் பாலி தீவில் நவம்பர் மாதத்தில் இடம்பெறும் G20 நாடுகளின் உச்சநிலை மாநாட்டில் அவர் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பிறகு அவர் ஆசிய பசிபிக் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பார் என கூறப்படும் அதேவேளை
அந்த இரண்டு மாநாடுகளுக்கும் இடையே அமெரிக்க-சீன அதிபர்கள் சந்திக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.