செங்குத்தாகத் தரையிறங்கும் ரொக்கெட் ; விண்வெளித் துறையில் சாதனை படைத்த சீனத் தனியார் நிறுவனம்
சீனாவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனம் ஒன்று, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ரொக்கெட் பூஸ்டரை (Rocket Booster) வெற்றிகரமாகச் செங்குத்தாகத் தரையிறக்கி புதிய சாதனையைப் படைத்துள்ளது.
விண்வெளித் துறையில் அமெரிக்க நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸுக்கு போட்டியாகச் சீனா இந்த மைல்கல்லை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விண்ணில் செலுத்தப்பட்ட ரொக்கெட் பூஸ்டர் பாகம், குறிப்பிட்ட உயரத்தை எட்டிய பின் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் மீண்டும் பூமிக்குக் கொண்டுவரப்பட்டு, குறிப்பிட்ட தளத்தில் செங்குத்தாகத் தரை இறக்கப்பட்டது.
ரொக்கெட் பூஸ்டர் பாகங்களை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை அனுப்பும் செலவு பெருமளவில் குறையும்.
சீன விண்வெளித் துறையில் அரச நிறுவனங்கள் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களும் அதிநவீன தொழில்நுட்பங்களில் வேகமாக முன்னேறி வருவதை இந்தச் சோதனை உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.