ஜப்பானில் படுத்துப் படமெடுத்த சீன பெண்களை திட்டிதீர்க்கும் இணையவாசிகள்!
ஜப்பானில் நெடுஞ்சாலை நடுவே படுத்துப் படமெடுத்த 2 சீனப் பெண்களை இணையவாசிகள் கண்டித்துள்ளனர்.
தோக்கியோவுக்கும் - ஃபுஜி மலைக்கும் இடையே உள்ள நெடுஞ்சாலையில் கார்களின் வரிசைக்கு நடுவே படுத்து, அமர்ந்து, மதுபானம் குடித்துக்கொண்டிருந்த படங்களை அப்பெண்கள் சமூக ஊடகத்தில் பதிவேற்றினர்.
இரண்டு சுற்றுலாப் பேருந்துகள் விபத்தில் சிக்கியதால் அங்கு நெரிசல் ஏற்பட்டது. 47 பேர் காயமுற்றனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டுப் பயணிகள். விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக அந்த நெடுஞ்சாலை மூடப்பட்டு 2 மணி நேரம் கழித்தே அது வழக்கநிலைக்குத் திரும்பியது.
இந்தச் சூழ்நிலையில்தான் அந்தப் பெண்கள் அப்படியொரு பதிவேற்றத்தைச் செய்தனர். இந்நிலையில் சீன பெண்களை கண்டித்த இணையவாசிகள் உடனடியாக அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.