பிராம்ப்டனில் மூன்று டிரக்குகள் தீக்கிரையான சம்பவம் குறித்து விசாரணை
பிராம்ப்டனில் மூன்று டோ டிரக்குகள் தீக்கிரையாகிய சம்பவம் தொடர்பாக பீல் பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவ்ரிட்ஜ் ட்ரெயில் Buffridge Trail மற்றும் செரெஸ்வென் வீதி Cresthaven Road ஆகிய பகுதிகளுக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியிலுள்ள ஒரு வீட்டு முன்புறமும், வீதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு டோ டிரக்குகள் தீப்பிடித்துள்ள தகவலை பொலிஸாரும் தீயணைப்பு படையினரும் உறுதிப்படுத்தினர்.
இந்த சம்பவம் ஏப்ரல் 15ஆம் திகதி அதிகாலை 1 மணிக்கு அருகில் உள்ள ஹுரோன்டாரியோ வீதி Hurontario Street மற்றும் வென்லெஸ் ட்ரைவ் வீதி Wanless Drive பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையில், அதே நேரத்தில் பிரிட்ஸ்டெல் ட்ரைவ் Brisdale Drive மற்றும் வெனிடியன் டெரெஸ் Venetian Terrace பகுதியில் இன்னும் ஒரு டோ டிரக் தீப்பிடித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மூன்று இடங்களிலும் தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.
இந்த சம்பவங்களில் யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
இந்தப் பகுதியில் வசிக்கும் சில குடியிருப்பாளர்கள், புவ்ரிட்ஜ் ட்ரெயில் Buffridge Trail பகுதியில் டோ டிரக்குகள் எரியும் போது “வெடிப்பு போன்ற சத்தங்கள்” கேள்விப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்துகள் சந்தேகத்திற்குரியவையாக கருதப்பட்டு, தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைக்கு சந்தேகநபர்களை குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.