அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளால் மூளையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு!

Canada
By Kamal Oct 16, 2026 06:38 AM GMT
Report

 அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதற்கும் மூளைப் பாதிப்பிற்கும் இடையே தொடர்பு இருப்பது கனடா முழுவதும் நடத்தப்பட்ட புதிய ஆராய்ச்சி ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஆரோக்கிய ஆராய்ச்சிப் பேராசிரியரும் பதிவுபெற்ற உணவியல் நிபுணருமான ரஷெல் டி சௌசா இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.

அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளால் மூளையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு! | Chips Cereals And Frozen Meals Could Raise

உருளைக்கிழங்கு சிப்ஸ், இனிப்பு சேர்க்கப்பட்ட தானிய உணவுகள், யோகர்ட் மற்றும் உறைவிக்கப்பட்ட உடனடி உணவுகள் போன்றவை இந்த அதிகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் பட்டியலில் அடங்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

2014-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆய்வில் நடுத்தர வயதைக் கொண்ட 8,700-க்கும் மேற்பட்ட கனடியர்கள் பங்கேற்றனர். அவர்களின் உணவுக் பழக்கவழக்கங்கள் கண்காணிக்கப்பட்டு, எம்.ஆர்.ஐ. பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

'ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன்' இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் வருமாறு:

தனது அன்றாட உணவில் 45 சதவீதத்திற்கும் அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுபவர்களுக்கு 'வாஸ்குலார் மூளைக் காயம்' ஏற்படுவதற்கான வாய்ப்பு 40 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

நோயாளிகள் உணராமலேயே ஏற்படும் 'சைலன்ட் ஸ்ட்ரோக்' மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான முன் அறிகுறிகள் எம்.ஆர்.ஐ. பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளன என ஆய்வின் மூத்த ஆசிரியரும் மருத்துவப் பேராசிரியருமான டாக்டர் சோனியா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இந்த மூளைக் காயங்கள் எதிர்காலத்தில் பக்கவாதம் அல்லது ஞாபக மறதி நோயான 'டிமென்ஷியா' ஏற்படுவதற்கான முன் எச்சரிக்கை அறிகுறிகளாகப் பார்க்கப்படுகின்றன.

மேலும், இத்தகைய உணவுகளை அதிகம் உட்கொள்பவர்களுக்கு உடலிலும் அடிவயிற்றிலும் அதிகக் கொழுப்புச் சேர்வதும் கண்டறியப்பட்டுள்ளது. கனடாவில் சராசரியாக ஒருவர் தினமும் உட்கொள்ளும் உணவில் பாதியளவு அதிகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளாகவே இருப்பதை 2025-ஆம் ஆண்டு இதய மற்றும் பக்கவாத அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையும் சுட்டிக்காட்டுகிறது.

உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக ஆரோக்கியமான முழு உணவுகளை வாங்குவது சில குடும்பங்களுக்குக் கடினமாக இருக்கலாம் என்பதை ஒப்புக் கொள்ளும் பேராசிரியர் டி சௌசா, முடிந்தவரை வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடவும், உள்ளூர் சந்தைகளில் விற்பனைச் சலுகைகளைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்கவும் அறிவுறுத்துகிறார்.

அதிகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் மூளையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் இடையே நேரடித் தொடர்பு உள்ளதா என்பதை முழுமையாக உறுதிசெய்யும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US