போரின் நடுவில் கிறிஸ்துமஸ் ; வைரலான ஜெலன்ஸ்கி உரை
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அழிய வேண்டும் என்பதுதான் உக்ரேனியர்களின் கிறிஸ்துமஸ் வேண்டுதலாக இருக்கும் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி பேசியுள்ளார்.
உக்ரைனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் அந்நாட்டு அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி விடியோ வெளியிட்டுள்ளார்.

விடியோவில் அவர் பேசியதாவது, "ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தினாலும், மிக முக்கியமான இடங்களை ஆக்கிரமிக்கவோ குண்டு வீசவோ முடியாது. உக்ரைன் மக்களின் இதயம், நம்பிக்கை மற்றும் ஒற்றுமைதான் அது.
இன்று, நம் அனைவருக்கும் ஒரே கனவும் வேண்டுதலும்தான் உள்ளது. அவர் (புதின்) அழிந்து போகட்டும் என்பதுதான். ஆனால், இதனைவிட பெரிய ஒன்றை நாம் கடவுளிடம் கேட்கிறோம். உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
⚡️Zelensky in his Christmas address to the nation wished DEATH upon Putin. pic.twitter.com/fN34Jc8DUC
— War Intel (@warintel4u) December 24, 2025