அடிதடிக்கு பெயர்போன நாடாளுமன்றில் வெடித்த மோதல்; பெண் எம்பிக்கள் செய்த செயல்!
தென் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கொசோவோ நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொசோவோ நாட்டின் நாடாளுமன்றத்தில் வழக்கம் போல் அவை நடவடிக்கைகளின் போது, அந்த நாட்டு பிரதமர் அல்பின் குர்தி உரையாற்றி கொண்டு இருந்தார்.
பிரதமரின் கேலியான உருவப்படம்
அப்போது எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் பிரதமரின் கேலியான உருவப்படத்தை மேடை முன்பு வைத்தார்.
Chaos erupted in Kosovo's parliament after an opposition party lawmaker sprayed water at Prime Minister Albin Kurti and his deputy https://t.co/Tbblg4htXu pic.twitter.com/jQajLBnoe9
— Reuters (@Reuters) July 13, 2023
அந்த புகைப்படத்தை துணை பிரதமர் அகற்றிய போது, ஆத்திரம் அடைந்த மற்றொரு எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் குவளையில் இருந்த தண்ணீரை பிரதமர் மீது ஊற்றினார்.
இதன் காரணமாக ஏற்பட்ட மோதல் கைகலப்பாக மாறியது. அதேவேளை கொசோவோ நாட்டின் நாடாளுமன்றம் அடிதடிக்கு பெயர் போன அவைகளில் ஒன்றாகும்.
அந்தவகையில் கடந்த 2018ம் ஆண்டு புதிய எல்லை உடன்பாடு குறித்த மசோதா மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சியான கொசோவோ ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எம்பிக்களே கண்ணீர் புகைக்குண்டுகளை கொண்டு வந்து நாடாளுமன்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.