கனடாவில் இந்தப் பகுதிகளில் கூரைகள் இடிந்து விழக்கூடிய அபாயம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
கனடாவில் பனிப்பொழிவு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் ஒன்றாரியோ பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு விசேடமாக இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தவார இறுதி வரையில் கடுமையான பனிப்பொழிவினை எதிர்நோக்க நேரிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஒன்றாரியோவின் சில பகுதிகளில் 40 முதல் 60 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடுமையான பனிப்பொழிவு காரணமாக கூரைகள் இடிந்து விழக்கூடிய அபாயம் காணப்படுவதாக கனேடிய சுற்றாடல் திணைக்களத்தின் சிரேஸ்ட வானிலை ஆய்வாளர் டேவிட் பிலிப்ஸ் எச்சரிக்க விடுத்துள்ளார்.
மின்சாரம் தடைப்படக்கூடிய சாத்தியங்களும் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மிகவும் அத்தியாவசியமான பயணங்களை தவிர்ந்த ஏனைய பயணங்களை தவிர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தியாவசியமான பயணங்களை மேற்கொள்ளும் போது முன் ஆயத்தங்களுடன் பயணம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பனிப்புயல் போன்றதொரு நிலைமை உருவாகும் சாத்தியங்கள் காணப்படுவதாகவும் டேவிட் பிலிப்ஸ் எதிர்வுகூறியுள்ளார்.