உளவுக் குற்றச்சாட்டில் கனடிய கால்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் பணி இடைநிறுத்தம்
கனடிய மகளிர் கால்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கனடிய தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர். பெவ் பிரிட்ஸ்மென் என்பவர் இவ்வாறு பணி நீக்கப்பட்டார்.
நியூசிலாந்து மகளிர் அணி பயிற்சியில் ஈடுபடுவதனை ட்ரோன் கேமரா கொண்டு கண்காணித்தார் என குறித்த பயிற்றுவிப்பாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பரிசில் ஆரம்பமாகும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து மற்றும் கனடிய அணிகள் பாரிஸ் சென்றுள்ளன.
பரிஸில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில் கால்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் நியூசிலாந்து கால்பந்தாட்ட அணி பயிற்சியில் ஈடுபடுவதை உளவு பார்த்தார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முடியும் வரையில் பயிற்றுவிப்பாளர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
எதிர்வரும் போட்டிகளுக்கு பயிற்றுவிப்பாளர் பிரிக்ஸ்மென் இணைந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் கனடிய ஒலிம்பிக் கமிட்டி அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.
போட்டித் தொடருக்கு முன்னர் நடைபெற்ற பயிற்சி நடவடிக்கைகளின் போது இவ்வாறு உளவு பார்க்கப்பட்டதாக நியூசிலாந்து ஒலிம்பிக் கமிட்டி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் முறைப்பாடு செய்திருந்தது.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் தன்னுடைய மகளிர் அணியின் பயிற்றுவிப்பாளர் பிரிக்ஸ்மென் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.