கனடாவில் ரயில் – வாகனங்கள் மோதுண்டதில் ஒருவர் பலி
கனடாவில் ரயில் மற்றும் வாகனங்கள் மோதுண்டதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
கனடாவின் ஒன்றாரியோ பிரிச்சின் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இரண்டு வாகனங்கள் ரயிலில் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ரயிலில் மோதுண்ட வாகன சாரதியொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த நிலையில் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
63 வயதான சீன் கார்பென்டர் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு உயிராபத்து கிடையாது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.