அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம் ; குவியல் குவியலாக பிணங்கள் ; 4 ஆண்டுகள் வாழ்ந்த கொடூரம்!
அமெரிக்காவில் அழுகிப்போன உடல்களுடன் நான்கு ஆண்டுகள் நபர் ஒருவர் வாழ்ந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் சுமார் 200 உடல்களை முறைகேடாகக் கையாண்ட இறுதிச் சடங்கு இல்லத்தின் உரிமையாளருக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான உடல்கள் குவியல்
அமெரிக்காவின் கொலராடோ மாகாணம், பென்ரோஸ் பகுதியில் 'ரிட்டர்ன் டு நேச்சர்' (Return to Nature) என்ற பெயரில் இறுதிச் சடங்கு இல்லத்தை ஜோன் ஹால்போர்ட் மற்றும் அவரது முன்னாள் மனைவி கேரி ஹோல்போர்ட் நடத்தி வந்தனர்.
அங்கு இயற்கை முறைப்படி (இரசாயனங்கள் இன்றி) உடல்களை அடக்கம் செய்வதாகக் கூறி வந்த தம்பதி , உடல்களை முறையாகப் பராமரிக்காமல் அழுக விட்டுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எரிக் பென்ட்லி, ஜோன் ஹால்போர்ட்டிற்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அவரது முன்னாள் மனைவி கேரி ஹோல்போர்ட் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவருக்கான தண்டனை விபரம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
அதுமட்டுமல்லாது உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் அவர்களின் அன்புக்குரியவர்களின் அஸ்தி எனக் கூறி போலி சாம்பலை வழங்கியுள்ளனர்.
உண்மையில் 189 உடலங்கள் நான்கு ஆண்டுகளாக அந்த இல்லத்தில் அழுகிய நிலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. குளிரூட்டப்படாத அறைகளில் குழந்தைகள் மற்றும் கருவிலேயே கலைந்த சிசுக்கள் உட்பட நூற்றுக்கணக்கான உடல்கள் குவியல் குவியலாக மீட்கப்பட்டன.
இறுதிச் சடங்கு இல்லத்தில் இருந்து வீசிய சகிக்க முடியாத துர்நாற்றம் காரணமாகவே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததாக கூறப்படுகின்றது.