லண்டன் வரும் அனைத்து பயணிகளுக்கும் வருகின்றது புதிய சட்டம்!
புதிய வகை கொரோனா தொற்று தாக்கம் காரணமாக, லண்டன் வரும் அனைத்து பயணிகளும் 14 நாட்கள் சொந்தச் செலவில் ஹோட்டலில் தங்க வேண்டும் என்ற சட்டத்தை நடைமுறை படுத்த பிரித்தானிய அரசு ஆலோசித்து வருகிறது. சராசரியாக இதற்கு ஒவ்வொரு பயணிகளும் சுமார் 1,500 பவுண்டுகளை செலவிட நேரிடும் என்றும்.
இதனால் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. லண்டனில் உள்ள ஹீத் ரூ விமான நிலையங்கள், மற்றும் ஏனைய விமான நிலையங்களுக்கு அருகில் உள்ள ஹோட்டல்களை இதற்கு தயார் செய்யும் படி அரசு பணித்துள்ளது.
எல்லாப் பயணிகளுக்கும் இது செல்லுபடி ஆகுமா ? இல்லை தொற்று அதிகமாக உள்ள நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு இது செல்லுபடியாகுமா என்பது தொடர்பாக அறிவிக்கப்பட வில்லை. இருப்பினும் எல்லாப் பயணிகளுக்கும் இந்த சட்டத்தை கொண்டு வருவது என்பது நடை முறைக்கு சாத்தியமற்ற விடையம். மில்லியன் கணக்கான மக்கள் மாதம் தோறும் லண்டன் வந்து செல்கிறார்கள்.
எனவே ஒரு சில நாடுகளையே குறிவைத்து இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்கப்படுகிறது.