கனடாவில் பனிப்பொழிவு குறித்த பயண எச்சரிக்கை
கனடாவில் பனிப்பொழிவு தொடர்பில் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இவ்வாறு பனிப்பொழிவு தொடர்பில் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலை வேதளையிலும் மாலை வேளையிலும் போக்குவரத்து செய்ய முடியாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்படும் என ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பில் அறிவித்துள்ளது.
தாழமுக்க நிலை காரணமாக பனிப்பொழிவு அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் வாகனங்களில் போக்குவரத்து செய்வதும் சிரமமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
வாகன சாரதிகள் மிகுந்த அவதாரத்துடன் பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதைகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும் எனவும் மெதுவாக வாகனங்களை செலுத்துமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோ, யோர்க், பீல் மற்றும் வடக்கு நயகரா பிராந்தியங்களில் கூடுதலாக இந்த நிலைமையை அவதானிக்க முடியும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மாலை வேளையில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானியல் ஆய்வாளர் நடாஷா ரமேஷாயி தெரிவித்துள்ளார்.