துப்பாக்கிக் குண்டு பாய்ந்த காயங்களுடன் மருத்துவமனைக்குள் நுழைந்த நபர்: பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்
கனேடிய நகரம் ஒன்றில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர் பொலிசார்.
திங்களன்று இரவு 9.00 மணியளவில், Scarborough நகரில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்துள்ளனர் பொலிசார்.
சம்பவ இடத்துக்குச் சென்றபோது, அங்கு துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதாவது வெடித்த துப்பாக்கிக்குண்டுகள் அங்கு கிடந்துள்ளன. அருகிலுள்ள கட்டிடங்களில் குண்டு பாய்ந்த அடையாளமும் இருந்துள்ளது.
ஆனால், துப்பாக்கியால் யாரும் சுடப்பட்டதாக தெரியவில்லை. யாரும் சுடப்பட்டதாக புகாரளிக்கவும் இல்லை, சுடப்பட்ட யாரையும் அருகில் காணவும் இல்லை.
இந்நிலையில், இரவு மணி 9.50க்கு துப்பாக்கிக் குண்டு பாய்ந்த காயங்களுடன் ஒருவர் உள்ளூர் மருத்துவமனை ஒன்றிற்குச் சென்றுள்ளார்.
ஆக, இதுவரை இருந்த குழப்பம் நீங்கி, துப்பாக்கிச்சூடு நடந்தது உண்மை என உறுதியானதுடன், தாக்கப்பட்டவரும் கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.