நூறு வயதை கடந்த நபர்; 84 ஆண்டுகளாக படைத்த சாதனை!
பிரேசிலில் நூறு வயதை கடந்த வால்டர் ஆர்த்மன் (Walter Orthmann) என்பவர், 84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றி சாதனை படைத்திருக்கிறார்.
இதற்காக அவரது பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. பிரேசிலின் புருஸ்க்யூ நகரில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் கடை நிலை ஊழியராக தொடக்கத்தில் பணியாற்றி வந்த வால்டர் ஆர்த்மன் (Walter Orthmann) , படிப்படியாக முன்னேற்றம் அடைந்து விற்பனை மேலாளராக உயர்ந்தார்.
நூறு வயதிலும் அதே உற்சாகத்துடன் பணியாற்றும் வால்டர் (Walter Orthmann) , பணியை விரும்பி செய்தால், ஒரே நிறுவனத்தில் நிச்சயம் நீடிக்க முடியும் என்கிறார்.
நிறுவனத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவது போல, ஆரோக்கியத்திலும் முறையான கவனம் செலுத்துவது அவசியம் எனவும் அவர் கூறுகிறார்.
அதேசமயம் தனது அன்றாட பணியை திறம்பட மேற்கொள்ளும் ஒருவரும் கின்னஸ் உலக சாதனை படைக்க முடியும் எனவால்டர் ( Walter Orthmann) நிரூபித்துள்ளார் .

