பிரான்ஸ் ஜனாதிபதி தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் விளையாட்டு அமைச்சருடன் கட்டித்தழுவி முத்தமிட்டது போது எடுக்கப்பட்ட புகைப்படம் அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 2024 ஒலிம்பிக் போட்டிகள் நடந்துவருகிறது.
குறித்த போட்டியின் தொடக்க விழாவின் போது பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு பெண் அமைச்சர் ஒருவர் கழுத்தில் நெருக்கமாக முத்தம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், அந்த புகைப்படம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலத்தைப் போல் அல்லாமல், வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில் செயின் நதியில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டித் தொடக்க விழாவை பிரான்ஸ் அரசு நடத்தியது.
இந்த தொடக்க விழாவில் பிரான்ஸ் ஜனாதிபதி மற்றும் பல நாடுகளின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன்பாது எதிர்பாராதவிதமாக பிரான்ஸ் விளையாட்டுத்துறை அமைச்சர் அமேலி ஓடே-காஸ்டெரா ஜனாதிபதியை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டுள்ளார்.
இந்தக் காட்சியை படம் பிடித்த அந்நாட்டு நாளிதலொன்று, இந்தப் புகைப்படத்தை கட்டுரையாக வெளிவிட்டது.
அதில், 'இந்த முத்தம் மிகவும் விசித்திரமானது' என்று எழுதப்பட்டுள்ளது.
அப்போது பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டலும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.