ஆஸ்திரேலிய நபர் ஒருவரால் அரச குடும்பத்தில் வெடித்த சர்ச்சை!

United Kingdom Australia Queen Elizabeth II Prince William King Charles III
By Sundaresan Sep 16, 2022 09:07 AM GMT
Sundaresan

Sundaresan

Report

பிரித்­தா­னிய மன்னர் 3 ஆம் சார்ள்ஸின் (King Charles III) மூத்த மகன் தான்தான் எனக் கூறிக் கொள்ளும் அவுஸ்­தி­ரே­லிய நபர் ஒருவர், இள­வ­ரசர் வில்­லி­யமை வேல்ஸ்(William Wales) இள­வ­ர­ச­ராக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டமை குறித்து அதி­ருப்தி தெரி­வித்­துள்ளார்.

மன்னர் 3ஆம் சார்ள்ஸை(King Charles III) மர­பணு பரி­சோ­த­னைக்கு உட்­படக் கோரி வழக்குத் தொடுக்­கப்­போ­வ­தா­கவும் அந்­நபர் கூறு­கிறார். சைமன் டொரன்ட் டே எனும் இந்­நபர் 56 வய­தா­னவர்.

ஆஸ்திரேலிய நபர் ஒருவரால் அரச குடும்பத்தில் வெடித்த சர்ச்சை! | Controversy Broke Out Royal Family Australian Man

இவர் ஒரு பொறி­யி­ய­லாளர் ஆவார். இள­வ­ரசர் சார்ள்­ஸுக்கும் (King Charles III)அவரின் மனை­வி­யான கமீ­லா­வுக்கும்(Camilla) பிறந்த இர­க­சிய பிள்ளை தான் என சைமன் டொரான்ட் டே(Simon Torrant Day) நீண்ட கால­மாக கூறி வரு­கிறார்.

1966 ஏப்ரல் 5 ஆம் திகதி பிரிட்­டனின் போர்ட்ஸ்மௌத் நகரில் பிறந்­தவர் சைமன் டொரன்ட் டே(Simon Torrant Day). 8 மாத குழந்­தை­யாக இருக்­கும்­போது, கரண் டே, டேவிட் டே எனும் பிரித்­தா­னிய குடும்­ப­மொன்­றினால் தத்­தெ­டுக்­கப்­பட்­ட­தா­கவும் அக்­கு­டும்பம் பின்னர் அவுஸ்­தி­ரே­லி­யாவில் குடி­யே­றி­ய­தா­கவும் டொரன்ட் டே(Simon Torrant Day) கூறு­கிறார்.

தற்­போது குயின்ஸ்­லாந்து மாநி­லத்தில் சைமன் டொரன்ட் டே வசித்து வரு­கிறார். சார்ளஸ்(King Charles III), கமீலா(Camilla) தம்­ப­தியின் இர­க­சிய குழந்தை தான் என தனது வளர்ப்புப் பாட்டி தன்­னிடம் தெரி­வித்தார் என டொரன்ட் டே(Simon Torrant Day) கூறு­கிறார்.

ஆஸ்திரேலிய நபர் ஒருவரால் அரச குடும்பத்தில் வெடித்த சர்ச்சை! | Controversy Broke Out Royal Family Australian Man

1965 ஆம் ஆண்டில் சார்ளஸும் கமீ­லாவும்(Camilla) நெருக்­க­மா­ன­வர்­க­ளாக இருந்­தனர் எனவும், தான் பிறப்­ப­தற்கு முன்னர் பிரித்­தா­னிய சமூக வல­யங்­க­ளி­லி­ருந்து கமீலா 9 மாதங்கள் காணாமல் போயி­ருந்தார். சார்ளஸ்(King Charles III) அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு சுற்­றுலா சென்­றி­ருந்தார் என டொரன்ட் டே(Simon Torrant Day) கூறு­கிறார்.

அரசி 2 ஆம் எலி­ஸபெத், மன்னர் 3 ஆம் சார்ள்ஸ், கமீலா(Camilla), இள­வ­ரசர் வில்­லியம் ஆகி­யோரின் இள­மைக்­கால புகைப்­ப­டங்­க­ளை­ளுடன் தனதும் தனது குழந்­தை­களின் புகைப்­ப­டங்­க­ளுக்கும் இடை­யி­லான உருவ ஒற்­று­மை­க­ளையும் அவர் வலி­யு­றுத்தி வரு­கிறார்.

தான் சார்ளஸின்(King Charles III) வாரிசு என நிரூ­பிப்­ப­தற்­காக சார்ளஸ், கமீலா(Camilla) ஆகி­யோரின் மர­பணு மாதி­ரி­க­ளையும் டொரான்ட் (Simon Torrant Day)கோரி வந்தார். இம்­மு­யற்சி வெற்­றி­ய­ளிக்­காத நிலையில், தனது நிலைமை தொடர்பில் 2ஆம் எலி­ஸபெத் ராணிக்கும் அவர் கடி­த­மொன்றை எழு­தி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஆஸ்திரேலிய நபர் ஒருவரால் அரச குடும்பத்தில் வெடித்த சர்ச்சை! | Controversy Broke Out Royal Family Australian Man

இள­வ­ரசர் வில்­லி­ய­முக்கு முன்­னரே பிறந்­தவர் என்ற வகையில் தானே மன்னர் சார்ளஸின்(King Charles III) முடிக்­கு­ரிய முதல் வாரி­சாக இருக்க வேண்டும் என்­கிறார் டொரன் டே(Simon Torrant Day). 2 ஆம் எலி­ஸ­பெத்தின் மறை­வுக்குப் பின்னர் 3 ஆம் சார்ளஸ்(King Charles III) மன்­ன­ரானார்.

அதை­ய­டுத்து அவரின் மூத்த மகன் இள­வ­ரசர் வில்­லியம், வேல்ஸ் இள­வ­ர­ச­ரா­கி­யுள்ளார். அரி­யணை ஏறு­வ­தற்­கான வாரி­சு­களில் முதல் நிலை­யி­லுள்­ள­வ­ருக்கே இப்­பட்டம் வழங்­கப்­படும் என்பது தெரியவந்துள்ளது. ‘அர­சிக்கும் எனது பிள்­ளை­க­ளுக்கும் இடை­யி­லான ஒற்­று­மைகள் எனக்கும் ஏனைய பல­ருக்கும் வியப்பை ஏற்­ப­டுத்­து­கின்­றன.

இந்த ஒற்­று­மைகள் கார­ண­மா­கவே நான் சார்ள்ஸின் மகன் எனக் கூறு­வ­தாக பலர் எண்­ணு­கின்­றனர். ஆனால் அது உண்­மை­யல்ல. எனது பிள்­ளைகள் பிறப்­ப­தற்கு நீண்ட காலத்­துக்கு முன்­னரே, சார்ள்ஸும் கமீ­லா­வுமே(Camilla) எனது பெற்றோர் என எனக்கு கூறப்­பட்­டது. இது தொடர்­பாக நான் ஆராய்ந்தேன்.

அதற்கு இந்த ஆதா­ரங்கள் வலிமை சேர்க்­கின்­றன’ என டொரன்ட் டே(Simon Torrant Day) தெரி­வித்­துள்ளார். இந்­நி­லையில், இள­வ­ரசர் வில்­லி­யமை வேல்ஸ் இள­வ­ர­ச­ராக மன்னர் சார்ளஸ் (King Charles III)அறி­வித்­ததால் தான் பணி­நீக்கம் செய்­யப்­பட்­டதைப் போல் உணர்­வ­தாக டொரன்ட் டே கூறு­கிறார்.

ஆஸ்திரேலிய நபர் ஒருவரால் அரச குடும்பத்தில் வெடித்த சர்ச்சை! | Controversy Broke Out Royal Family Australian Man

2 ஆம் எலி­ஸபெத் அரசி இறந்த பின்னர் தனது அடுத்த நட­வ­டிக்கை என்ன என்­பது குறித்து உலகம் முழு­வ­து­மி­ருந்து ஊட­கங்­களும் அரச குடும்ப விசி­றி­களும் தன்னை கேட்­கின்றர் என டொரன்ட் டே(Simon Torrant Day) கூறு­கிறார்.

மன்னர் சார்ள்ஸையும்(King Charles III) அவரின் மனைவி கமீ­லா­வையும்(Camilla) மர­பணு பரி­சோ­த­னைக்கு உட்­பட நிர்ப்­பந்­திப்­ப­தற்­கான சாத்­தியம் குறித்து சிரேஷ்ட சட்ட அறி­ஞர்­க­ளுடன் தான் கலந்­து­ரை­யா­டி­ய­தா­கவும், இதற்கு அவர்கள் சாத­க­மான கருத்து தெரி­வித்­த­தா­கவும் டொரன்ட் டே(Simon Torrant Day) கூறு­கிறார்.

மர­பணு பரி­சோ­தனை கோரிக்­கைக்கு சார்ளஸ்(King Charles III) பதி­ல­ளிக்­கா­ததால் தான் ஏமாற்­ற­டைந்­துள்­ளாக டொரன்ட் டே(Simon Torrant Day) கூறு­கிறார். ‘அவர் எனது தந்தை இல்­லை­யென்றால், இப்­பி­ரச்­சி­னையை சுமு­க­மாக தீர்ப்­ப­தற்­கான கட்­டத்தை சார்ளஸ்(King Charles III) கடந்து சென்­று­விட்டார்.

அவர் பதி­ல­ளிக்­காமல் இருப்­பது மேலும் பல சந்­தே­கங்­களை எனக்கு ஏற்­ப­டுத்­து­கி­றது என டொரன்ட் டே தெரி­வித்­துள்ளார். ‘நான் மீண்டும் குடும்ப நீதிமன்றத்துக்கு செல்வேன்.

கடந்த தடவை நான் நீதிமன்றம் சென்றபோது, சகல ஆதாரங்களும் முறையாக சமர்ப்பிக்கப்பட்டால் மரபணு பரிசோதனை கோரிக்கை விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என நீதிபதி கூறினார்’ என சைமன் டொரன்ட் டே(Simon Torrant Day) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US