கியூபா ஒரு தோல்வியடைந்த நாடு ; ட்ரம்பின் கருத்துக்களால் வெடித்த சர்ச்சை
கியூபா ஒரு தோல்வியடைந்த நாடு என்றும், அது தற்போது அமெரிக்காவின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளப் பக்கத்தில் இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது: "குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எவரும் கியூபா குறித்து என்னிடம் பேசியதில்லை. கியூபா ஒரு தோல்வியடைந்த நாடு, அது வீழ்ச்சியை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறது.

தற்போது கியூபா அமெரிக்காவிடம் உதவி கோரி வருகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பேசுவோம். இதற்கிடையில், நான் சீனாவுக்குப் புறப்படுகிறேன்" என அவர் பதிவிட்டுள்ளார்.
கியூபாவின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலையை மிகக் கடுமையாகச் சாடியுள்ள ட்ரம்ப், அந்த நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள அமெரிக்காவின் உதவி தேவை என்பதைத் தனது பாணியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கியூபா விவகாரத்தில் தனது அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விரைவில் ஆலோசிக்கப்படும் என்பதையும் அவர் தனது பதிவின் மூலம் கோடிட்டுக் காட்டியுள்ளார்.