இறக்குமதி வரியில் சர்ச்சை ; ட்ரம்புக்கு அதிரடி அழுத்தம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வரி விதிப்பு தொடர்பான வழக்கில் அமெரிக்க உயர்நீதிமன்றம் தீர்மானம் வழங்கவுள்ள நிலையில், அவர் இவ்வாறு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியா மற்றும் சீனா உட்பட உலகின் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டியும் மற்றும் ரஷ்யாவிடம் எண்ணெய் பொருட்களை வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ட்ரம்ப் மிக அதிகமாக வரிகளை விதித்தார்.

அவசர கால அதிகாரத்தை பயன்படுத்தி, சர்வதேச நாடுகளுக்கு ட்ரம்ப் தன் இஷ்டப்படி கூடுதல் வரி விதித்தார்.
இந்தநிலையில், குறித்த நடவடிக்கை சட்டவிரோதமானது என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பினை எதிர்த்து ட்ரம்ப் தரப்பில் அமெரிக்க அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பை வெளியிட உள்ள நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் அவசர அவசரமாக மாற்று வழிகளை தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூடுதல் வரிவிதிப்பை உயர்நீதிமன்றமும் ரத்து செய்து விட்டால் உடனடியாக மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நெருக்கடி ட்ரம்புக்கு ஏற்படும்.
எனவே, முன்கூட்டியே புதிய வரிகளை வகுக்கும் பணிகளில் அமெரிக்க அரசு நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.