இத்தாலியின் மிகவும் கொடூரமான நபர் கைது
இத்தாலி பொலிசாரால் 30 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த மாஃபியா தலைவன் இறுதியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல கொலை வழக்குகளில் தேடப்பட்டுவந்த Matteo Messina Denaro என்பவர் தமது இளவயதிலேயே பொலிசாருக்கு பயந்து தலைமறைவாகியுள்ளார்.
ஆனால் பொலிசார் மிகவும் தேடப்படும் பயங்கர குற்றவாளிகள் பட்டியலில் அவர் பெயரை இணைத்தனர். துறைமுக நகரமான Trapani-ஐ தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த Messina Denaro, தலைமறைவு ஆவதற்கு முன்னர் மிகவும் கொடூரமான நபராக அறியப்பட்டார்.
தற்போது 60 வயதாகும் Messina Denaro தனியார் சுகாதார மையம் ஒன்றில் ரகசியமாக சிகிச்சை தேட வந்த நிலையில், பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.
அவரை கைது செய்த பொலிசார், துணை ராணுவத்தினரின் உதவியுடன் ரகசிய பகுதிக்கு விசாரனை தொடர்பில் கொண்டுசென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், எஞ்சியுள்ள காலம் அவர் சிறையில் செலவிடுவார் என்றே கூறுகின்றனர்.