பிரித்தானியாவில் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள்
தமது நாட்டுக்கான பயணக் கட்டுப்பாடுகளை நேற்று முதல் கடுமையாக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. இதன்படி, பிரித்தானியாவுக்கு வருகை தரும் எந்தவொரு பயணியும், கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவுக்கு வருகை தருவதற்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனையின் மூலம் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், PCR பரிசோதனையை மேற்கொள்ளாது பிரித்தானியாவுக்கு வருகை தருபவர்களுக்கு 500 ஸ்டேர்லிங் பவுண் அபராதம் விதிக்கப்படவுள்ளது.
கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், பிரித்தானியாவுக்குள் வரும் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த புதிய பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் பிரித்தானியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.