பிரித்தானியாவில் கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் புதிதாக 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணித்தியாலத்தில் புதிதாக 41,278 பேர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,19,962 ஆக உயர்ந்துள்ளது.
பிரிட்டனில் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிதியாலத்தில் மேலும் 35,152 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை 73 லட்சத்து 25 ஆயிரத்து 785 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது கொரோனா பாதிப்புடன் 15,53,619 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.