அச்சுறுத்தும் Omicron மாறுபாடு.. பிரித்தானியாவில் ஒரே நாளில் 90 பேருக்கு பாதிப்பு உறுதி
பிரித்தானியாவில் மேலும் 90 பேருக்கு புதிய வகை Omicron தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களாக பிரித்தானியாவில் Omicron மாறுபாடு தீவிரம் காட்டி வருகின்றது. முதல் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டு பிடித்த புதிய வகை வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஜேர்மனி என 40க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.
புதிய வகை கொரோனாவை நினைத்து உலக நாடுகள் பீதியில் உறைந்துள்ளன. இதையடுத்து ஆபத்தான நாடுகளில் பயண விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரிட்டனில் நேற்று மட்டும் Omicron தொற்றால் புதிதாக 90 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 336ஆக அதிகரித்துள்ளது. மேலும் இங்கிலாந்தில் 64 பேரும், ஸ்காட்லாந்தில் 23 பேரும், வேல்ஸில் 3 பேரும் Omicron வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணரான பேராசிரியர் பால் ஹன்டர் கூறுகையில் பிரிட்டனில் சில வாரங்களுக்குள் டெல்டா வகை கொரோனா படிப்படியாக வெளியேறும் Omicron விரைவாக ஆதிக்கம் செலுத்தும் என அதிர்ச்சிகர தகவல்களை தெரிவித்துள்ளார்.