ஜெர்மனியில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா பரவல்!
ஜெர்மனியில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனாவால் (Covid-19) 37,770 பேர் பாதிக்கப்பட்டதோடு 172 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் இதுவரை மொத்தமாக 49 இலட்சத்து 63 ஆயிரத்து 698 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 97ஆயிரத்து 994 பேர் மரணமடைந்துள்ளனர்.
ஜெர்மனியில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 4இலட்சத்து 15ஆயிரத்து 504 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 2,616 பேர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜெர்மனியில் கடந்த 24 மணித்தியாலத்தில் 17,600 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 44 இலட்சத்து 50 ஆயிரத்து 200 ஆக உயர்ந்துள்ளது.