எலான் மஸ்கிற்கு மீண்டும் கொரோனா பாதிப்பு !
உலக பணக்காரர்களில் பட்டியலில் முன்னணி அந்தஸ்த்தை கொண்ட எலான் மஸ்க் ( Elon Musk ) சமீபத்தில் தனது நிறுவனத்தின் முதல் ஐரோப்பிய கிளையை ஜெர்மனி அடுத்துள்ள பெர்லினில் தொடங்கினார்.
இதற்காக அவர் தனது தனியார் ஜெட் விமானம் மூலம் பெர்லின் சென்று வந்த நிலையில் அவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ,
Covid-19 is the virus of Theseus.
— Elon Musk (@elonmusk) March 28, 2022
How many gene changes before it’s not Covid-19 anymore?
I supposedly have it again (sigh), but almost no symptoms.
"எத்தனை மரபணு மாற்றங்களுக்கு பின் அது கோவிட்-19 தொற்றாக உருமாறியது. எனக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செயய்யப்ட்டுள்ளது. ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை" என பதிவிட்டுள்ளார்.
இதேவேளை ஏற்கனவே எலான் மஸ்க் ( Elon Musk )கடந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார்.
அதன் பின்னர் கொரோனா தொற்று நோய் குறித்தும் அதன் தடுப்பூசி மீதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.