வெளிநாடொன்றில் மீண்டும் உச்சமடையும் கொரோனா பாதிப்பு!
தென் கொரியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடா்ந்து 2-ஆவது நாளாக வியாழக்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது,
கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாக 1,842 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் தொடா்ந்து இரண்டாவது நாளாக இந்த எண்ணிக்கை புதிய உச்சம் தொட்டுள்ளது.
முந்தைய நாள் இந்த எண்ணிக்கை 1,784-ஆக இருந்தது இந்த என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தென் கொரியாவில் இதுவரை 1,84,103 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 2,063 பேர் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.
கடந்த 2 வாரங்களாகவே அங்கு தினசரி கொரோனா தொற்று ஆயிரத்தைக் கடந்து வருகிறது.
மந்தமாக செயல்படுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி திட்டங்கள், மக்களிடையே காணப்படும் அலட்சியம், வேகமாகத் தொற்றும் தன்மை கொண்ட டெல்டா வகைக் கொரோனா பரவி வருவது போன்ற காரணங்களால் அங்கு தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.