ரஷ்யாவை புரட்டி எடுக்கும் கொரோனா! பலியானோர் எண்ணிக்கை 2.81 லட்சத்தை கடந்தது
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் வேகமெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32,602 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 98 லட்சத்தையும் தாண்டியுள்ளதாகவும் தொற்றுக்கு 1,206 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 2.81 லட்சத்தைக் கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தொற்றில் இருந்து 85 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் 10.17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.