வேறு வழியில்லை... கனத்த இதயத்துடன் வளர்ப்பு பிராணிகளை காப்பகத்தில் ஒப்படைக்கும் மக்கள்
பிரிட்டனில் விலைவாசி உயர்வு காரணமாக பெரும்பாலான மக்கள் தங்கள் வளர்ப்பு பிராணிகளை காப்பகங்களில் ஒப்படைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் குறித்த நடவடிக்கையால் காப்பகங்களில் உள்ள ஊழியர்களின் பணி இரட்டிப்பானதுடன், தொகையும் அதிகமாக செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது என கூறுகின்றனர்.
பிரிஸ்டல் பகுதியில் செயல்பட்டுவரும் காப்பகம் ஒன்று, 17,000 பவுண்டுகள் தொகை அளவுக்கு செலவு அதிகரித்துள்ளதாக நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த குளிர்காலம் சவால் மிகுந்ததாக இருக்கும் என குறிப்பிட்டுள்ள காப்பக மருத்துவர் ஒருவர், விலைவாசி உயர்வு குடும்பங்களை மட்டுமின்றி வளர்ப்பு பிராணிகளையும் பாதிக்கும் என்றார்.
மேலும், இந்த ஆண்டு மட்டும் தங்களுக்கான எரிசக்தி கட்டணம் 17,000 பவுண்டுகள் வரையில் அதிகரித்துள்ளதாக கூறும் அவர், மக்கள் பலர் விலைவாசி உயர்வால் தங்கள் வளர்ப்பு மிருகங்களை காப்பகங்களில் ஒப்படைத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டில் இருந்து பிரிஸ்டல் காப்பகத்தில் இருந்து வளர்ப்பு பிராணிகளுக்கு அளிக்கப்பட்ட கவனிப்பு 54% அதிகரித்துள்ளது என்றார்.
உள்ளூர் மக்களிடம் இருந்து பெறும் நிதியுதவியால் மட்டுமே செயல்படும் காப்பகம் இதுவென குறிப்பிட்டுள்ள அவர், தற்போதைய சூழலில் நிதியுதவி கோருவது கடினமான ஒன்று எனவும், பெரும்பாலான மக்கள் நெருக்கடியான சூழலை எதிர்கொண்டுவருவதே காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.