பேரிழப்பை சந்திக்கவுள்ள நாடுகள் ; ரஷ்யாவுக்கு 10, உக்ரைனுக்கு 20
2022 இல் ரஷ்யா மற்றும் உக்ரைனின் பொருளாதாரங்கள் முறையே 10 சதவீதம் மற்றும் 20 சதவீதம் சுருங்கும் என ஐரோப்பிய மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (EBRD) தெரிவித்துள்ளது.
அதேசமயம் முன்னதாக, உக்ரைனுக்கு 3.5 சதவீதமும், ரஷ்யாவுக்கு 3 சதவீத வளர்ச்சியும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் அனைத்து வளர்ச்சிகளையும் கட்டுப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போரை நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த போதும், இன்னும் சமாதானம் கிடைத்தபாடில்லை.
இந்த நிலையில், சமீபத்திய அறிவிப்புகளின் படி இரண்டு மாதங்களுக்குள் ஒரு போர் நிறுத்தம் இடைத்தரகர் மூலம் ஏற்படுத்தப்படலாம் என கருதப்படும் நிலையில், அதைத் தொடர்ந்து உக்ரைனில் ஒரு பெரிய புனரமைப்பு முயற்சி தொடங்கும் என்று பலதரப்பு வங்கி கூறியது.
அத்தகைய சூழ்நிலையில், உக்ரேனின் போரினால் பாதிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி அடுத்த ஆண்டு 23 சதவிகிதம் மீண்டு வர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை மேற்கத்திய நாடுகளால் ரஷ்யா மீது சுமத்தப்பட்ட கடுமையான பொருளாதாரத் தடைகள் அது பூஜ்ஜிய வளர்ச்சியை பதிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.