நாட்டின் பொருளாதார பலத்தை காண்பிக்கும் பெறுமதிமிக்க நாணயங்கள்
ஒரு நாட்டின் நாணய மதிப்பு என்பது அந்த நாட்டின் பொருளாதார பலத்தை பிரதிபலிக்கின்றது.
அதன் மதிப்பு அதிகரிக்கும் போது, அந்த நாடு வலுவான பொருளாதார சக்தியாக மாற வாய்ப்பு உள்ளது.
மதிப்புடன் வர்த்தகத்திற்கு ஏற்ற நாணயம் புழக்கத்தில் இருந்தால் அந்த நாட்டின் முன்னேற்றத்தில் மாற்றம் ஏற்படும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபை உலகின் 180 நாணயங்களை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ளது. அந்தந்த நாடுகளின் ஏற்றுமதி, இறக்குமதி, அந்நிய செலாவணி கையிருப்பு, தங்க கையிருப்பு மற்றும் நாளாந்த வர்த்தகம் ஆகியவற்றின் அடிப்படையில் நாணயத்தின் மதிப்பு தொடர்ந்து மாற்றங்கள் ஏற்படும்.
இந்த நிலையில் உலகின் மதிப்புமிக்க நாணயங்களின் பட்டியலை போர்ப்ஸ் அண்மையில் வெளியிட்டது.
குவைத் தினார், பஹ்ரைன் தினார், ஓமானி ரியால், ஜோர்டானிய தினார்,ஜிப்ரால்டர் பவுண்ட்,பிரிட்டிஷ் பவுண்ட், கேமன் தீவு பவுண்ட்,சுவிஸ் பிராங்க், யூரோ,அமெரிக்க டொலர் ஆகிய நாணயங்கள் உலகில் மதிப்புமிக்க 10 நாணயங்கள் என பேர்ப்ஸ் கூறியுள்ளது.