தடுப்பூசிகள் கலப்பால் தேனிலவை ரத்து செய்த கனேடிய இளம் தம்பதி

Arbin
Report this article
பார்படாஸ் நாட்டில் தேனிலவு கொண்டாடச் செல்ல தயாரான ஒன்ராறியோ தம்பதி, கலப்பு தடுப்பூசியால் தங்கள் பயணத்தை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஒன்ராறியோவை சேர்ந்த Eric Seed மற்றும் அவரது மனைவி, தங்கள் தேனிலவை ஒத்திவைத்து வந்துள்ளனர்.
மட்டுமின்றி, தங்களுக்கான வாய்ப்பு அமைந்து, இருவரும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வரையில் தேனிலவு பயணத்திற்காக காத்திருந்துள்ளனர்.
இந்த நிலையில் கரீபியன் தீவுகளின் பார்படாஸ் நாட்டுக்கு தேனிலவு செல்ல விமானம் முன்பதிவு செய்துள்ளனர். 23ம் திகதி முன்பதிவு செய்துள்ள நிலையில், பேரிடியாக 25ம் திகதி, பார்படாஸ் நிர்வாகம் விதிகளை திருத்தியுள்ளதாக கூறி, பயணிக்க முடியாது என கூறியுள்ளனர்.
இவர்கள் தங்களுக்கான தடுப்பூசியில் முதல் டோஸ் ஒரு நிறுவனத்தின் தயாரிப்பாகவும், இரண்டாவது டோஸ் இன்னொரு நிறுவனத்தின் தடுப்பூசி என கலந்து போட்டுள்ளனர்.
அது முழுமையான தடுப்பூசி என கருத முடியாது என பார்படாஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசியும் ஒரே நிறுவனத்தின் தயாரிப்பாக இருந்தால் மட்டுமே, அதை முழுமையான தடுப்பூசியாக கருத முடியும் எனவும் பார்படாஸ் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
மேலும், கலப்பு தடுப்பூசியுடன் பயணிக்கும் பயணிகள் 8 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார் எனவும் குறிப்பிட்டுள்ளது.
பார்படாஸ் செல்ல முடியாமல் போகவே, Eric Seed தற்போது டொமினிகன் குடியரசிற்கு சென்று தேனிலவை கொண்டாட மீண்டும் பதிவு செய்துள்ளார்.