முதல் முறை இந்தியாவிலிருந்து மகள் குடும்பத்தைக் காண்பதற்காக கனடா புறப்பட்ட தம்பதியர்: அனுபவித்த வேதனைகள்

India Canada
By Balamanuvelan Jun 30, 2022 07:50 AM GMT
Report

கனடாவில் வாழும் தங்கள் மகள் குடும்பத்தை சந்திப்பதற்காக ஆவலுடன் இந்தியாவிலிருந்து புறப்பட்ட தம்பதியர் அனுபவித்த வேதனையால், இனி கனடா பக்கமே வரமாட்டோம் என்றே கூறிவிட்டார்கள் அவர்கள்.

 மும்பையைச் சேர்ந்த அங்கிதா கருட், திருமணமாகி கணவருடன் கனடாவிலுள்ள Fredericton நகரில் வாழ்ந்துவருகிறார். அவர் மும்பைக்கு பெற்றோரை சந்திக்க வந்த நிலையில், கனடாவில் மகளும் அவரது கணவரும் வாழும் இடத்தைக் காண்பதற்காக, முதல் முறையாக இந்தியாவிலிருந்து கனடாவுக்கு மகளுடன் புறப்பட்டிருக்கிறார்கள் அங்கிதாவின் பெற்றோர்.

மும்பையிலிருந்து தோகா வந்து, அங்கிருந்து மொன்றியல் வந்த பயணம்கூட களைப்பாகத் தெரியவில்லை என்று கூறும் அங்கிதா, ஆனால், மொன்றியலுக்கு வந்தபிறகுதான் பிரச்சினையே ஆரம்பித்தது என்கிறார். ஆம், மொன்றியல் விமான நிலையம் வந்தபோது, Fredericton செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்று அவர்களுக்கு கூறப்பட்டுள்ளது.

ஏர் கனடா நிறுவனம் தங்குவதற்கான ஏற்பாடோ, உணவோ, ஏன் தண்ணீரோ கூட வழங்கவில்லையாம். அத்துடன் விமானம் ரத்து செய்யப்பட்டதற்கு மாற்று ஏற்பாடு செய்கிறோம் என்ற பெயரில் அங்கிதாவுக்கு செவ்வாய்க்கிழமையும் அவரது பெற்றோருக்கு ஞாயிற்றுகிழமையும் தனித்தனியாக விமானம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் விமான நிறுவனத்தார்.

முதல் முறை இந்தியாவிலிருந்து மகள் குடும்பத்தைக் காண்பதற்காக கனடா புறப்பட்ட தம்பதியர்: அனுபவித்த வேதனைகள் | Couple Leaving Canada To See Family

நேரம் ஆக, ஆக, தன் பெற்றோருக்கு மாத்திரை போடுவதற்காக தண்ணீர் வாங்க அங்கிதா செல்ல, அங்கே ஒரு நீண்ட வரிசையாம். முக்கால் மணி நேரம் வரிசையில் நின்றுவிட்டு, வேறு வழியில்லாமல், வரிசையைத் தாண்டி முன்னே சென்று கெஞ்சிக் கூத்தாடி தண்ணீர் வாங்கிவந்திருக்கிறார் அவர்.

இதற்கிடையில் நடந்தவற்றை மொபைல் மூலம் அறிந்துகொண்ட அங்கிதாவின் கணவரான குருராஜ் மஹாஜன், தன் மனைவியும் அவரது பெற்றோரும் தங்குவதற்காக அரும்பாடு பட்டு மொபைல் மூலமாக மொன்றியலில் ஒரு ஹொட்டல் முன்பதிவு செய்துள்ளார்.

அத்துடன், நேராக தனது காரை எடுத்துக்கொண்டு மனைவியையும் அவரது பெற்றோரையும் அழைத்துவரப் புறப்பட்டுவிட்டிருக்கிறார் அவர்.

முதல் முறை இந்தியாவிலிருந்து மகள் குடும்பத்தைக் காண்பதற்காக கனடா புறப்பட்ட தம்பதியர்: அனுபவித்த வேதனைகள் | Couple Leaving Canada To See Family

ஏழு மணி நேரப் பயணத்துக்குப் பின் மொன்றியல் சென்று மனைவியையும் அவரது பெற்றோரையும் குருராஜ் சந்திக்க, கணவனைப் பார்த்ததும் இதுவரை இருந்த மொத்த மனவேதனையும் வெடித்துப் புறப்பட, கணவரைக் கட்டிக்கொண்டு வெகுநேரம் அழுதிருக்கிறார் அங்கிதா.

இதற்கிடையில், தாங்கள் முதல் முறையாக கனடா வந்த நிலையில், தாங்கள் அனுபவித்த வேதனையால் மனம் நொந்துபோன அங்கிதாவின் பெற்றோர், இனி கனடா பக்கமே வரமாட்டோம் என்று கூறிவிட்டார்களாம்!

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US