கடற்கரைக்கு சென்ற பிரித்தானிய தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி!
பிரித்தானியாவில் கடற்கரையில் மூழ்கும் மணலில் தம்பதியினர் மாட்டி கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
பிரித்தானியா Merseyside இல் உள்ள குரொஸ்பி எனும் கடற்கரையிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூழ்கும் மணலில் மாட்டிக்கொண்ட தம்பதியினரை சவுத்பொர்ட் (Southport) காற்பந்துக் குழு வீரர்கள், காப்பாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
குறிப்பாக தம்பதிக்கு உதவ காற்பந்து வீரர்கள் உடனடியாகச் சென்றனர் என்று காற்பந்துக் குழுவின் சமூக ஊடகத் தலைவர் தெரிவித்துள்ளா்.
இருவரும் காயங்கள் இன்றி மீட்கப்பட்டதாக மெர்சிசைட் தீயணைப்பு மீட்புக் குழு தெரிவித்தது.
பெண்ணை விரைவில் மீட்க முடிந்தது. அந்த ஆண் இடுப்பு வரையில் மாட்டிக்கொண்டிருந்ததால் அவரை மீட்கச் சுமார் 5 நிமிடம் ஆனது என தெரியவந்துள்ளது.
அவரை மீட்கச் சுமார் 4 காற்பந்து வீரர்கள் முயற்சி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.