ட்ரம்பிற்க்கு அதிரடி காட்டிய நீதிமன்றம் ; வரிகள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் அண்மையில் விதிக்கப்பட்ட 10% தற்காலிக உலகளாவிய வரிகள் நியாயமற்றவை என அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனால் அமெரிக்க ஜனாதிபதியின் இறக்குமதி வரி உத்திக்கு அமெரிக்க மற்றொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

1970-களின் வர்த்தகச் சட்டத்தின் கீழ், அவர் அண்மையில் விதித்த 10% தற்காலிக உலகளாவிய வரிகள் நியாயமற்றவை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எனினும் இதன் பலன் இரண்டு தனியார் இறக்குமதியாளர்களுக்கும் மற்றும் வொஷிங்டன் மாகாணத்திற்கும் மட்டுமே பொருந்தும் என நீதிமன்றம் தடுத்துள்ளது.
அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தின் 2-1 என்ற அடிப்படையிலான இந்தத் தீர்ப்பு, ட்ரம்ப் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு நடவடிக்கைகள் முடியும் வரை மற்ற அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் இந்தத் தற்காலிக வரிகள் தொடரும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்த வரிகள் ஜூலை மாதத்தில் காலாவதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய இரண்டு மாதங்களில் காலாவதியாக உள்ள வரிகளுக்கு இந்தத் தீர்ப்பு பொருந்தினாலும், ட்ரம்பின் உலகளாவிய வரி இலட்சியங்களுக்கு இது மற்றொரு பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.