கனடாவில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் தடை தொடரும்
ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தொடர கனடா அரசுக்கு அதிகாரம் வழங்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் தீாப்பு வழங்கியுள்ளது.
முன்னதாக, பிளாஸ்டிக் பயன்பாட்டை ரத்து செய்யும் மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கை சட்டவிரோதமானது என கூறி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
2023ஆம் ஆண்டு நீதிமன்றம், “பிளாஸ்டிக் தயாரிப்பு பொருட்கள் அனைத்தையும்” நச்சுப் பொருள்களாக வகைப்படுத்தியதில் அரசு தனது அதிகார எல்லையை மீறியதாக தீர்ப்பளித்திருந்தது.

எனினும் இந்த தீர்ப்பினை மத்திய அரசாங்கத்தின் மேன்முறையீட்டு நீதிமன்றம் தற்பொழுது ரத்து செய்துள்ளது.
எனினும் மூன்று நீதிபதிகள் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற குழு, பிளாஸ்டிக் தயாரிப்பு பொருட்களை நச்சுப் பொருள்களாக பட்டியலிட்ட அரசின் முடிவு நியாயமானது என தெரிவித்தது.
இந்த வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, ஸ்ட்ரா, மளிகைப் பைகள், கலக்குக் குச்சிகள் மற்றும் பானக் கான்களை ஒன்றாகப் பிடிக்க பயன்படும் ‘சிக்ஸ்-பேக்’ வளையங்கள் உள்ளிட்ட ஆறு வகையான ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் இறக்குமதியை அரசு தடை செய்துள்ளது.
இந்த பொருட்கள் அதிக அளவில் குப்பையாகக் காணப்படுவதோடு, அவற்றிற்கு மாற்று தீர்வுகளும் எளிதில் கிடைப்பதால் அவை தேர்வு செய்யப்பட்டதாக அரசு விளக்கியது.
மேலும், பிளாஸ்டிக்குகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் அபாயங்களை ஆய்வு செய்ய தனி மதிப்பாய்வு குழுவை அமைக்காத அரசின் முடிவும் நியாயமானதே என மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.