பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை வேறு சிறைக்கு மாற்ற நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பாகிஸ்தான் - பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறைச்சாலையில் இருந்து இம்ரான்கானை வேறு சிறைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதில் தோஷகானா ஊழல் வழக்கில் கடந்த மாதம் 5-ம் திகதி அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அவர் சிறைதண்டனை அனுபவித்து வருகிறார்.
இதனையடுத்து அவரது உடல்நலம், சமூக மற்றும் அரசியல் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஏ-வகுப்பு வசதிகள் கொண்ட சிறைக்கு மாற்றும்படி இம்ரான்கான் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இஸ்லாமாபாத் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் அவரை ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.